×

திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

 

சேலம், பிப்.12: சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது. சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், ஏராளமான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரக குடிநீர் திட்டம், தூய்மை பாரத இயக்கம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அங்கன்வாடி மையங்கள், ஊரக விளையாட்டு உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், கலெக்டர் பிருந்தாதேவி பேசுகையில், ‘அனைத்து கிராமங்களும் சமூக பொருளாதார வளர்ச்சியினை முழுமையாக அடைவதை உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை, தொடர்புடைய அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பணிகளை குறித்த காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,’ என்றார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Rural Development Agency ,Collector Brindadevi ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...